ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் புளியங்குடி கிராமத்தில் இன்று சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது முகாமில்
மருத்துவர் சுந்தரமூர்த்தி உதவி இயக்குநர், பரமக்குடி தலைமையிலும்
ராஜா புளியங்குடி கிராம செயலர் முன்னிலையிலும் நடைபெற்றது
இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் மருத்துவர்.மோகன் மருத்துவர்.செல்வி,
கால்நடை ஆய்வாளர்: வீரகேசரி,கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் விஜயராணி செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 72 பயனாளிகளின் 2152 கால்நடைகள் பயனடைந்தன (பசு. 70
வெள்ளாடு 520 செம்மறி ஆடு 1050 கோழி 400 நாய் 26 மொத்தம் 2152 முகாமில்
சிகிச்சைப் பணி அறுவை சிகிச்சைப் பணி செயற்கை முறை கருவூட்டல்
ஆண்மை நீக்கம் குடற்புழு நீக்கம் போன்ற பணிகள் செய்யப்பட்டன.
மாடுகளில் கால்கானை வாய்க்கானை மற்றும் கன்று வீச்சு நோய்
ஆடுகளில் ஆட்டுக்கொல்லி நோய் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் நோட்டீஸ் விவசாய பெருமக்களுக்கு வழங்கப்பட்டது.
முகாமில் சிறந்த கிடேரி கன்றுகளின் உரிமையாளர் மற்றும் சிறந்த கால்நடை வளர்போருக்கு பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.