கடலூர் கிழக்கு மாவட்டம், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய சார்பாக சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட திமுக கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன் தலைமை தாங்கினார். கட்சியின் செயல்பாடு குறித்தும், உறுப்பினர் சேர்க்கை முகம் குறித்தும் பாரி பாலன் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி தலைமை பொறுப்பாளர் கட்சி நிர்வாக இடத்தில் பேசினார்.
மேலும் இந்த கூட்டத்தில் சட்டமன்றத் தொகுதி மாவட்ட பொறுப்பாளர் பழனி ஆசிரியர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர்,அப்பு சத்தியநாராயணன், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமாரி இளவரசன்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செந்தில் ராஜா,நடராஜன். துணை அமைப்பாளர்கள் அரவிந்தன்,நிதிஷ், ஊராட்சி செயலாளர்கள் கோகிலக்கண்ணன், கலைச்செல்வன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கருணாநிதி, ஆத்மா கமிட்டி தலைவர் ஜெயச்சந்திரன்,முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.