தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் புதிய முயற்சியாக மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் பாளை ரோட்டில் உள்ள ஆடுகளம் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுப் போட்டி இன்று முதன் முறையாக மாநகராட்சி மேயர் ஜெகன் துவக்கி வைத்தார்.
ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை மண்டலம் வாரியாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
அதுபோல மாநகராட்சியில் பணிபுரியும் பெண்கள், கைப்பந்து போட்டி மற்றும் இறகு போட்டியில் விளையாடினர். அதன் பின்பு பெண் மாமன்ற உறுப்பினர்களும், மாநகராட்சி பெண் ஊழியர்களும் கைப்பந்து போட்டியில் விளையாடினர்.
இதுவரை எந்த ஒரு மாநகராட்சி நிர்வாகமும் மாநகராட்சி மேயராக இருந்த நபர்களும் இது மாதிரியான விளையாட்டு போட்டி நடத்த முன் வந்ததில்லை முதன்முறையாக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் புதிய முயற்சியாக போட்டி நடத்த முடிவு செய்து இன்று துவக்கி உள்ளார்.
இந்த போட்டி நடைபெறும் போது ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்த மாநகராட்சி மேயர் ஜெகன், பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்து பல மணி நேரம் விளையாட்டு போட்டியை கண்டு களித்தார்.
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இதுபற்றி மாநகராட்சி மேயர் ஜெகன் கூறுகையில்,
புதிய முயற்சியாக மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரையும், அதுபோல மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது இது ஒரு நட்புறவு உருவாக்கும் வகையில் உள்ளது. வரும் காலங்களில் மாதம் தோறும் ஒரு நாள் இது போல விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் கூறினார்.
இதுபற்றி மாநகராட்சி பணியாளர்கள் கூறுகையில், இதுவரை மாநகராட்சியில் இப்படி ஒரு போட்டி நடைபெற்றது கிடையாது. புதிய முயற்சியாக மாநகராட்சி மேயர் ஜெகன், மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை கலந்து கொள்ளும் பல வகையான போட்டிகள் நடத்தியது உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.
வரும் காலங்களில் இது போன்ற போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் கூறியுள்ளது பாராட்டக்கூடியது என்று மாநகராட்சி பணியாளர்கள் கூறினர்.
இந்த மாதிரி விளையாட்டு போட்டி நடத்தப்படுவது ஒரு வித்தியாசமான புதிய முயற்சியாக இருந்தாலும், மாநகராட்சி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை ரசித்தனர். குறிப்பாக மாநகராட்சி மேயர் ஜெகன் பார்வையாளர்கள் இருக்கையில் மக்களோடு மக்களாக அமர்ந்து விளையாட்டு போட்டியை ரசித்ததையும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வித்தியாசமான முயற்சியை மாநகர மக்களுக்கு தந்து கொண்டிருக்கும் மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
அவருடைய முயற்சி, நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவிற்கு மிகவும் பக்கபலமாக இருக்கும் என்பது 100 சதவீதம் உறுதியாகவே தெரிய வருகிறது.