திருவொற்றியூர் ஜோதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணிய திருக் கோவிலில் வேலுக்கு பூஜை செய்து ஊர்வலமாக சென்று பேருந்தில் மதுரையில் நடக்கும் முருக பக்த மாநாட்டிற்கு சென்றனர்
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வடசென்னை பாஜக மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் தலைமையில் சுமார் 700 பேர் வட சென்னையில் இருந்து 12 பேருந்துகளில் செல்வதற்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
திருவெற்றியூர் ஜோதி நகரில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் நடைபெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனை பூஜையில் சுமார் 50க்கும் மேற்பட்ட கலந்து கொண்ட சிறப்பு பூஜையில் மூலவர் முருகப்பெருமானுக்கு இரண்டு அடி வேல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் அந்த வேலை அரோகரா வெற்றிவேல் வீரவேல் என்ற கோஷங்களுடன் கோவிலை சுற்றி வந்து மாநாடு சிறப்பாக நடப்பதற்காக பிரார்த்தனை செய்தனர்
பின்னர் ஊர்வலமாக சென்று பேருந்தில் மாநாட்டிற்கு சென்றனர் வடசென்னையில் இருந்து சுமார் 700 பேர் 12 பேருந்துகளில் மாநாடு இருக்கு செல்வதாகவும் முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெற பிரார்த்தனை செய்ததாகவும் தெரிவித்தனர்