திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் தெற்கு மாவட்டம் தேமுதிக ஆலோசனை கூட்டம்
அடுத்த தேர்தலை நோக்கி செயல்திட்டங்கள் தீவிரம் — முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தெற்கு மாவட்டம் சார்பில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தனியார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அண்ணன் கே. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக, தேமுதிக கொள்கைப் பரப்புச் செயலாளரும் அழகாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ.,வரும் மான மோகன்ராஜ் மற்றும் தொண்டரணி அமைப்பு கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொகுதி பொறுப்பாளர்கள் தாராபுரம் சட்டமன்ற தொகுதி அண்ணாதுரை, உடுமலை தொகுதி ராமச்சந்திரன், மடத்துக்குளம் தொகுதி ராஜா கருணாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், தாராபுரம் ஒன்றியம் நவநீதகிருஷ்ணன், மூலனூர் ஒன்றியம் வெங்கடாசலம், குண்டடம் பேரூர் கழக செயலாளர் பிரகாஷ், தாராபுரம் நகர செயலாளர் ரஞ்சித் குமார், அலங்கியம் பகுதியில் பெரியசாமி, நாகராஜ், மணி டெய்லர் பாலு, ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மகளிர் அணியைச் சேர்ந்த சர்மிளா, மாவட்ட துணை செயலாளர் அண்ணன் கந்தசாமி, பொதுக்குழு உறுப்பினர் குணசேகர் கிரி, உடுமலை சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் ரமேஷ் உள்ளிட்டோர், நகர நிர்வாகிகள், சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், குளத்துப்பாளையம் பேரூராட்சி கழக செயலாளர் முருகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு ஊராட்சியில் பொதுக்கூட்டம் நடத்துவது.
வாக்காளர் பட்டியலில் புதிய இளைஞர்கள் மற்றும் பெண்கள் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்வது.நகரம் மற்றும் கிராமங்களில் கட்சி அடையாளம் காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் விரிவாக்கம் (பலகை, அலுவலகம், விழிப்புணர்வு கூட்டம்).
சமூக ஊடகங்களில் கட்சியின் செய்தி பரப்பை வலுப்படுத்துதல்.
உறுப்பினர் சேர்க்கை முகாம்களை தொடர்ந்து நடத்தியும், இளைஞர் அணியினருக்கான பயிற்சி முகாம்கள் நடத்தியும் கட்சி அமைப்பை வலுப்படுத்துவது.
கட்சியின் வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் எதிர்கால தேர்தல் முன்னெடுப்புகளை மையமாகக் கொண்டு, இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பேட்டி: திரு.மோகன்ராஜ்
தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர்.