அரியலூர் நிருபர் கேவி முகமது
அரியலூர் மாவட்ட தேமுதிக ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நடந்தது மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் தலைமை தாங்கினார் வரும் பொதுத்தேர்தலில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அரியலூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மின்விசிறிகள் சரிவர இயங்க வகை செய்ய வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கழக துணைச் செயலாளர் கழக மண்டல பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ சுபா ரவி மண்டல துணை பொறுப்பாளர் அன்புராஜ் அரியலூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஞானபண்டிதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் மாவட்ட பொருளாளர் சக்திவேல் மாணவர் அணி அஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர் வடக்கு அவை தலைவர் ரவி அனைவருக்கும் நன்றி கூறினார்
முன்னதாக நகரச் செயலாளர்தாமஸ் ஏசுதாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார்