புத்தகங்களை எடைபோடும் வித்தியாசமான புத்தகக் கண்காட்சி! புத்தகங்கள் தனி தனி விலையாக விற்பதில்லை. கிலோ கணக்கில் விற்கப்படுகின்றன.
கோவை புரோசோன் மாலில் கதை கார்னிவல் புத்தக திருவிழா
கோவை புரோசோன் மாலில், விலை அல்ல, எடையால் புத்தகங்கள் விற்கப்படும் சிறப்பு புத்தகக் கண்காட்சி கதை கார்னிவல் ஜூன் 20 முதல் ஜூலை 6, 2025 வரை நடைபெறுகிறது.
ஒரு கிலோ புத்தகம் ரூ.549 என்ற விலை திட்டத்தில், வாசகர்கள் தங்கள் விருப்பமான புத்தகங்களை எடை போட்டு வாங்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
புத்தக விற்பனையைத் தவிர, இவ்விழாவில் வாரந்தோறும் நேரடி கதை சொல்லல், படைப்புப் பட்டறைகள், குழந்தைகள் விரும்பும் கதாபாத்திரங்களுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
குழந்தைகள், பெற்றோர் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும், கதைகள் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இவ் விழா வடிவமைக்கப்பட்டுள்ளது. கதைகள் வாசிக்கப்படுவதோடு அல்லாமல், உணரப்பட வேண்டியவை, வாழப்பட வேண்டியவை, என விழா ஏற்பாட்டாளர்கள் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர். இங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இங்கு புத்தகங்கள் தனி தனி விலையாக விற்பதில்லை. இங்கு
1 கிலோ ரூபாய் 549,
5 கிலோ ரூபாய் 1,995 மற்றும்
10 கிலோ ரூபாய் 3,490 ஆகும். மேலும் பள்ளி குழந்தைகளுக்கு சிறப்பு சலுகையில் புத்தகங்கள் கிடைக்கும்.
இந்த கண்காட்சிக்கு இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் புத்தகத் திருவிழா குடும்பங்களுக்கும் புத்தக ரசிகர்களுக்கும் நிச்சயமாக சுவாரசியமான அனுபவமாக அமையும். இலவச நுழைவு கொண்ட இவ்விழா, குடும்பங்களுக்கும், இளம் வாசகர்களுக்கும் தவறாமல் காண வேண்டிய ஒரு மகிழ்ச்சி மிக்க இலக்கிய திருவிழா என்பதில் சந்தேகமே இல்லை.
இடம்: புரோசோன் மால், மெயின் ஆட்டோரியம், கோவை
தேதிகள்: ஜூன் 20 முதல் ஜூலை 6, 2025
தகவல் தொடர்புக்கு: எஸ். பிரிங்ஸ்டன் நாதன் – 87782 10040