தமிழகம் முழுவதும் இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யின் 51 வது பிறந்தநாள் விழாவை தமிழக வெற்றிக் கழக கட்சியினர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் அன்னதானம் இனிப்புகள் வழங்கி விமரிசையாக இன்று கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய் 51-வது பிறந்தநாள் முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் வல்லம் பேரூர் கழகம் சார்பில் தஞ்சை மாவட்ட செயலாளர் இரா விஜய சரவணன் தலைமையில் வல்லம் பஸ் ஸ்டாண்டில் நோட்டு பேனா,மற்றும் ஸ்வீட் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் த ஞ்சை மத்திய மாவட்டம் சிறுபான்மை செயற்குழு உறுப்பினர்அமீர் பாஷா ,வல்லம் செயலாளர் பாரதிபொருளாளர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்