தேனி வடக்கு மாவட்ட ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் எம்பி தலைமையில் தெருமுனை பிரச்சார கூட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக ஒன்றிய இளைஞரணி சார்பாக தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் நடைபெற்றது
தேனி வடக்கு மாவட்டம் முழுவதும் நகரம் ஒன்றியம் பேரூர் மற்றும் ஊரக பகுதிகளில் திராவிட மாடல் அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்று வருகிறது
இதன்படி தேனி வடக்கு ஊரக பகுதிகளான தப்புக் குண்டு தாடிச்சேரி வெங்கடாசலபுரம் கோவிந்த நகரம் அம்பாசமுத்திரம் அரண்மனைப் புதூர் ஜங்கால்பட்டி உள்ளிட்ட ஊரக கிராம ஊராட்சிகளில் கிராம மக்களுக்கு புரியுமாறு அரசின் நான்காண்டு சாதனைகள் அரசின் நலத்திட்ட உதவிகள் பொது மக்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கி பேசப்பட்டது
இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தேனி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் பெருந்தலைவர் திமுக ஒன்றிய செயலாளர் எம். சக்கரவர்த்தி மற்றும் ஒன்றிய ஊரக திமுக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.