மதுரை காந்தி அருங்காட்சியகம் மற்றும் செசி இணைந்து நடத்தும் அமைதி சங்கத்தின் தல்லாகுளம் கிளையை காந்தி நினைவு அருங்காட்சியகத்
தின் செயலர் நந்தாராவ் துவங்கி வைத்தார்.
அவர் பேசும்போது, ” காந்தி என்றால் அமைதி, அகிம்சை, உண்மை நினைவுக்கு வரவேண்டும். மாணவப்பருவத்தில் போதைப் பழகத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். வளர் இளம் பருவத்தினரை ஒழுங்குப்படுத்த அமைதி சங்கம் செயல்பட்டு வருகிறது.
உங்களை அன்போடு வரவேற்கிறேன்.” என்றார். இந்நிகழ்ச்சிக்கு காந்தி ஆராய்ச்சி. நிறுவனத்தின் முதல்வர் தேவதாஸ் தலைமை தாங்கினார். அமைதி சங்கத்தின் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். அவர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
கல்வி அலுவலர் நடராசன் சிறப்புரை ஆற்றி பேசும்போது, ” காந்தி தினமும் படித்தார். நீங்களும் தினமும் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்பண்பு உங்களை சிறந்தவராக்கும் என்றார். தல்லாகுளம் அமைதி சங்கத்தின் தலைவராக சாய் மித்ரனும் செயலாளராக சந்தோஷும் பொருளாளராக ஸ்ரீகோகுல்ராஜூம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.