தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி சாலை மறியல், நமது தேசம் கட்சியினர் போலீசாரிடம் கடும் வாக்குவாதம்.
திருப்பத்தூர் மாவட்டம் விசமங்களம், குரும்பேரி, வெங்களாபுரம்,ஆத்தூர்குப்பம்,உடையாமுத்தூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் வாழும் அருந்ததியர் மக்களுக்கு பல ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ் வழங்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து உள்ளனர்.
இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காகதால் ஆத்திரமடைந்த நமது தேசம் கட்சியினர் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலை விசமங்களத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றர்.
இதனால் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சாலை மறியலை கலைக்க சென்ற போலீசாரிடம் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்-இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.