தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை மூடக்கோரி அப்பகுதி இஸ்லாமியர்கள் மற்றும் பொம்மிடி முன்னாள் அதிமுக ஒன்றிய தலைவர் சி.எம்.ஆர்.முருகன் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு -இதனால் காவல்துறையினர் குறிப்பு
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்து துறிஞ்சிப்பட்டி பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு துறிஞ்சிப்பட்டி பொம்மிடி பையர் நத்தம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மது பிரியர்கள் அரசு மதுபான கடைக்கு வந்து செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது
பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு மது பிரியர்களால் இடையூறு ஏற்படுவதாகவும் துறிஞ்சிப்பட்டி பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வருவதால் இஸ்லாமிய பெண்களுக்கு குடிமகன்களால் தொல்லைகள் ஏற்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து மதுபான கடை அகற்ற வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் கொடுத்து வந்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு துறிஞ்சிப்பட்டி அரசு மதுபான கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த 50க்கும் மேற்பட்ட பொம்மடி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.