மதுரை மாவட்ட சமூகநலத்துறை சார்பில் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 403பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம், அமைச்சர்கள் வழங்கினர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரி
மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ் 403பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கினர்.
தமிழ்நாடு அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பல்வேறுவிதமான திருமண நிதியுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம்,டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமணி நிதியுதவி திட்டம், அன்னை தெரசா ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர். தர்மாம்பாள் நினைவு விதவைமறுமணம் நிதியுதவி திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் தற்போது புதுமைப் பெண்திட்டமாக மாற்றப்பட்டு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கிடும் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சமூகநலன்
மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ் 403பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கினர்.
பின்னர், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி ஆகியோர் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமை யிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின்பு மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்
பட்டுள்ள அரசின் திட்டங்கள், முன்னேற்றத்தில் உள்ள திட்டப் பணிகள், பயனாளிகள் குறித்த விவரங்களை தொகுத்து செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள ”நாடு போற்றும் 4 ஆண்டு தொடரட்டும் இது பல்லாண்டு” என்ற தலைப் பிலான அரசு சாதனை மலர் புத்தகத்தை வெளியிட்டனர்.