பெரியகுளம் தாலுகா ஜி. கல்லுப்பட்டி ஊராட்சிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி வருவாய் கிராமம் உட்கடை ஜி. கல்லுப்பட்டி கிராமத்தில் வருகிற 25. 06 .2025 புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது பெரியகுளம் தாலுகாவைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை பட்டா மாறுதல் முதியோர் உதவித்தொகை கோருதல் புதிய குடும்ப அட்டை கோருதல் ஆதி திராவிடர் நலத்துறை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விபத்து நிவாரணம் விவசாயத்துறை போக்குவரத்து துறை மற்றும் இதர துறைகள் வரும் 25.06.2025 அன்று புதன்கிழமை ஜி. கல்லுப்பட்டி கிராமத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நேரில் மனுவினைக் கொடுத்து பயன்பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.