நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
7708616040
கீழையூர் கடைத்தெரு பகுதியில் சிபிஐ சார்பில் நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டத்திற்கான அமைதி கூட்ட பேச்சுவார்த்தை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கீழையூர் கடைத் தெருவில் சாலை மறியல் போரட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கீழ்வேளூர் வட்டாட்சியர் கவிதாஸ் தலைமையில் அமைதி பேச்சவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் கீழையூர் காவல் நிலைய ஆய்வாளர் செங்குட்டுவன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் செல்வம், ஒன்றிய செயலாளர் காந்தி, ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்ற அமைதி பேச்சவார்த்தையில் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக ஒட்டப்பட்ட நோட்டீஸினை அடையாளம் தெரியாத நபரால் கிழிக்கப்பட்டுள்ளது.
அதனை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் மற்றும் பொதுவுடைமை இயக்கம் என்ற பெயரில் நோட்டீஸ் ஒட்டிய நரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, பணிபுரிந்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சியை பணி மாறுதல் செய்திட வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.
மேற்கண்ட கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும் அனுப்பி வைக்கப்படும் என்ற முடிவினை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் மேற்படி சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது.