புவனகிரி செய்தியாளர் வீ. சக்திவேல்
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று சமையல் உதவி பணியாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது இப்பகுதியில் 11 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு அதற்கான நேர்காணல் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது இந்த நேர்காணலில் 93 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர் இந்நிலையில் விண்ணப்பதாரர்களிடம் டோக்கன் கொடுத்து சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் நடைபெற்றது
நேர்காணலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வட்டாட்சியர் முன்னிலையில் நடத்தினர் நேர்காணல் தொடங்கியது முதல் விண்ணப்பதார்கள் உள்ளே சென்ற பிறகு விண்ணப்பதாரருக்கு இருக்கை கொடுக்காமல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருக்கையில் அமர்ந்து விண்ணப்பதாரரை நிற்க வைத்து நேர்காணல் நடத்தினர்
நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் திடிர்யென்று வருகை புரிந்தார் அதன் பின்னர் நேர்காணல் நடத்திய அதே பெண்ணிடம் மீண்டும் இருக்கை கொடுத்து அதிகாரிகள் நேர்காணல் நடத்தினர்
இச்சம்பவம் நேர்கானலில் கலந்துகொண்ட பொதுமக்களிடம் முகம் சுளிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் அதிகாரிகள் எளிய மக்களை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் என்பதும் உயர் அதிகாரிகள் இருக்கும் பொழுது ஒரு நிலை இல்லாத போது ஒரு நிலை என்பது தெரிய வருகிறது