பெரியகுளம் அருகே மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 186 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா ஜி. கல்லுப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 186 பயனாளிகளுக்கு 2 கோடியே 17 லட்சத்து 64.480 மதிப்பில்லான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.
முன்னதாக அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜ. மகாலட்சுமி பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத்பீடன் திட்ட இயக்குனர்கள் அபிதா ஹனீப் ஊரக வளர்ச்சி சந்திரா மகளிர் திட்டம் தனித்துணை ஆட்சியர் சாந்தி இணை இயக்குனர்கள் சாந்தாமணி வேளாண்மை கோயில் ராஜா கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் தோட்டக்கலை நிர்மலா மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நாள் அலுவலர் சிவபாலன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி தாசில்தார் மருதுபாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலர்விழி ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்