பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அமைந்துள்ள மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், சமூக நலனை முன்னிறுத்தும் வகையில் “போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி” சிறப்பாக மற்றும் உற்சாகமாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் M.R. ரகுதாதன் அவர்கள் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன் முன்னிலையில் நிகழ்ச்சி சிறப்பாக தொடங்கியது.
இதில், சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்ட மாணவர்களை உருவாக்க பெரிதும் உதவும் வகையில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டன.
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன் அவர்கள், மாணவர்களுக்கு நேரடியாக உரையாற்றி, போதைப் பொருட்களால் ஏற்படும் உடல் மற்றும் மன நலப் பாதிப்புகள், சமூகக் கேவலங்கள் குறித்து விழிப்புணர்வூட்டினார். மேலும், சாலை விதிமுறைகளை கடைப்பிடிப்பது எப்படி தனிப்பட்டவரின் உயிரையும், பிறரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்பதைப் புகுத்தினார்.
இதையடுத்து, கல்லூரி வளாகத்திற்கு அருகிலுள்ள சாலையில் பயணித்த வாகன ஓட்டிகளுக்கு விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சீட் பெல்ட் போட்டு வந்த கார் ஓட்டிகளுக்கு பாராட்டும் வடிவில் தாளாளர் M.R. ரகுதாதன் அவர்கள்、எழுதியுள்ள புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. இது நிகழ்ச்சியின் தனிச்சிறப்பாக அமைந்தது.
நிகழ்ச்சியின் இறுதியில், கல்லூரியின் பெண்கள் துறைத் தலைவர் திருமதி எழிலரசி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முழுமையான ஏற்பாடுகளையும் துறை பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் குணா அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
இந்நிகழ்வு மாணவர்களுக்கு சமூக பொறுப்பு உணர்வை வளர்க்கும் ஒரு முக்கியமான கட்டமாக இருந்தது என அனைவராலும் பாராட்டப்பட்டது.