கரூர் மாவட்ட செய்தியாளர் மரியன் பாபு
கரூரில் சர்வதேச போதை ஒழிப்பு தினம்-
மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி
கரூர் வருவாய் கோட்டாட்சியர் வளாகத்தில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
மீ. தங்கவேல்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெராஸ்கான் அப்துல்லா ஆகியோர் கொடி அசைத்து விழிப்புணர் பேரணியை தொடங்கி வைத்தனர்.
மதுபானம், கள்ளச்சாராயம் அருந்துவதினாலும், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதினாலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பழகத்திற்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணியானது வளாகத்தில் தொடங்கி இப் விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர் பதாகைகள் ஏந்தி முக்கிய சாலையான திண்ணப்பா தியேட்டர், கரூர் பேருந்து நிலையம் மனோர கார்னர் , ஜவகர் பஜார், திருவள்ளூர் மைதானம் வரை விழிப்புணர் பேரணி நிரைவடைந்தது பின்பு மைதானத்தில் போதை விழிப்புணர்வு பற்றி உறுதிமொழி அரசு அதிகாரிகள் , நகர காவல்துறையினர்,மதுவிலக்கு காவல்துறையினர்.மற்றும் கல்லூரி.மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.