தேனி வடக்கு மாவட்ட மார்க்கையன்கோட்டை பேரூர் திமுக இளைஞர் அணி சார்பில் எம்பி தலைமையில் தெருமுனை பிரச்சாரபொதுக் கூட்டம் தேனி வடக்கு மாவட்டம் மார்க்கையன்கோட்டை பேரூர் திமுக இளைஞரணி சார்பாக தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது
தேனி வடக்கு மாவட்டம் முழுவதும் நகரம் ஒன்றியம் பேரூர் மற்றும் ஊரக பகுதிகளில் திராவிட மாடல் அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெரு முனை பிரச்சார பொதுக்கூட்டம் கூ நடைபெற்று வருகிறது இதன்படி தேனி வடக்கு மாவட்டம் மார்க்கையன்கோட்டை பேரூர் பஸ் நிலையம் அருகே நடந்த இந்த கூட்டத்திற்கு மார்க்கையன் கோட்டை பேரூராட்சி கவுன்சிலர் மார்க்கையன்கோ ட்டை பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் எம் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.
மார்க்கையன் கோட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் பேரூர் திமுக செயலாளர் ஒ.ஏ. முருகன் சின்னமனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கன்னியம் பட்டி சி. முருகேசன் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.ஆஜிப்கான் சின்னமனூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரா.ராஜேந்திரபிராசத் மாவட்ட பிரதிநிதி சி.மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி நாடு போற்றும் நான்காம் ஆண்டு திராவிட மாடல் அரசின் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினார் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜி.பி. ராஜா தலைமை கழக பேச்சாளர்கள் குமரி பிரபாகரன் இ. முத்துச்செல்வம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் பேரூர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் என். தினேஷ்குமார் நன்றி உரையாற்றினார்.