செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பசுமை நோக்கிய எதிர்கால நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் செயின்ட் ஜோசப்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இவ்வாண்டின் நோக்கமான பசுமையை நோக்கிய எதிர்காலம் பற்றிய தொடக்க நிகழ்வானது, பள்ளி வளாகத்தில் 1500 மாணவர்கள் தங்கள் கைகளில் 1500 மரக்கன்றுகளை ஏந்தி
பசுமை போர்த்திய புல்வெளியாய் காட்சியளித்தனர்.

இந்நிகழ்விற்கு செங்கல்பட்டு மறைமாவட்ட பள்ளி கண்காணிப்பாளர் அருட்தந்தை.
கிறிஸ்துராஜ் சிறப்பு அழைப்பாளராக பள்ளி தாளாளர் அருட்தந்தை. மைக்கேல் அலெக்சாண்டர் பள்ளிமுதல்வர் அருட்சகோதரி ஜாய்ஸ் ரோஸ்லின்
துணைமுதல்வர்.அந்தோணி, அச்சிறுப்பாக்கம் புனித சூசையப்பர் ஆலயத்தின் பங்குத்தந்தை. அருட்பணி. ராஜ் மற்றும் அனைத்து ஆசிரியபெருமக்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கு நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனம் 1500 மரக்கன்றுகளை அளித்தது சிறப்பும், பெருமையும் சேர்த்தது. இதில் பசுமையை
பற்றிய உரையும், கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. மரங்களை நடு, உயிரை வளப்படுத்து என்ற கருத்து மாணவர்களிடையேயும் பின்பு பேரணி வழியாக
மக்களிடையேயும் வெளிப்படுத்தப்பட்டது.

மேலும் இம்மரக்கன்றுகளை அச்சிறுப்பாககம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள தரிசு நிலங்களில் நடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *