மதுரை மாவட்ட புதிய ஆட்சிய ராக பிரவீன்குமார் பொறுப்பேற்றார்.
கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன்குமார், 2017-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தவர். மதுரை மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய இவர், விருத்தாசலம் சார் ஆட்சியர், ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், சென்னை பெருநகர மாநகராட்சி வட்டார துணை ஆணையர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார்.
தமிழக அரசின் பணியிட மாறுதல் உத்தரவின் படி , பிரவீன்குமார் மதுரை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கொண்டார்.