சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினம் மதுரையில் அனுசரிக்கப்பட்டது. அகில இந்திய மகளிர் கலாச்சார சங்கம் மற்றும் மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் போதை பொருள் எதிர்ப்பு சங்கம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி , கல்லூரியின் முதல்வர் டாக்டர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பாலிடெக்னிக் மாணவர்களின் கடமைகளை உணர்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் மதுரையின் பிரபல மனநல நிபுணரான டாக்டர்.செல்வமணி முக்கிய விருந்துனராக கலந்து கொண்டு போதைப் பொருள்களால் விளைவிக்கும் உடலும் மனதும் மீதான அபாயத்தை விவரித்தார். மாணவ செல்வங்கள் எந்தவிதமான போதைக்கும் ஆளாகாமல் எச்சரிக்கையாக எதிர்காலத்தை கையாள வேண்டும் என்று உணர்த்தினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் கபிலன் கலந்து கொண்டு உறையாற்றும் போது புகைப்பிடிப்பதும் மது அருந்துவதும் உடலுக்கும் சமுதாயத்துக்கும் தீங்காய் இருக்கும் பட்சத்தில் சினிமா காட்சிகளில் இதனை மிகைப்படுத்தும் ரீதியில் காண்பிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் சினிமா ஹீரோக்களை பின்பற்றாதீர்கள், மாறாக சமுதாயத்தில் இளம் மானவர்கள் சாதிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன, தொழில்நுட்பத்தில் நீங்கள் சாதிக்க தேவையான அம்சங்களை மட்டுமே கடைப்பிடிக்க அறைகூவல் விடுத்தார்.
அகில இந்திய மகளிர் கலாச்சார சங்கத்தின் சார்பாக சமூக ஆர்வாளர் ஹில்டா மேரி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதுபோதை பழக்கம் என்பது சமுதாயத்தை கவ்வி உள்ள பேரபாயம் குறித்த இந்த நிலைமையை மாற்றி அமைக்க வேண்டும் என்றால், தனிநபர் ஒழுக்க நெறியுடன் கூடிய சமூக மாற்றம் தேவை என்று கூறினார்.