திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வலங்கைமான் வட்ட மாநாடு நடைபெற்றது. மாநாடு தலைவர் எஸ்.புஷ்பநாதன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக சங்க கொடியினை வட்டார துணைத் தலைவரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான என்.சண்முகம் ஏற்றி வைத்து, அனைவரையும் வரவேற்று பேசினார். மறைந்த தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 87 – வயதான மூத்த சங்க உறுப்பினர் கோ.சீனிவாசன் தலைமை ஆசிரியர் ஓய்வு அவர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் வி. முனியன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். வட்ட செயலாளர் ஏ.சண்முகம் வேலை அறிக்கையையும், வட்ட பொருளாளர் பி.ஜெயராமன் நிதிநிலை அறிக்கையையும் வாசித்து ஊழியர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத்தலைவர் வி.நடராஜன், தலைமையாசிரியர் ஓய்வு புலவர் சிவ. செல்லையன், செயற்குழு உறுப்பினர் ராஜசுலோச்சனா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெ.சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாநில செயலாளர் குரு. சந்திரசேகரன் சிறப்புரையாற்றி மாநாட்டை முடித்து வைத்து நிறைவுறை ஆற்றினார். மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதிகள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தல், 70 வயதில் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல், ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்பு ஊதியம் பெற்று ஓய்வு பெற்ற அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7,850- வழங்க வேண்டும்,
21 மாதம் விட்டு விட்டு நிறுத்தி வைக்கப் பட்டுள்ள அகவிலைப்படியை உடன் வழங்குதல், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகள் மற்றும் தீர்வு செய்யப்படாத நிலுவைப் பட்டியல் களையும் தீர்வு செய்து அனைவருக்கும் வாரிசுகளுடன் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. வட்டத் தலைவராக எஸ். புஷ்பநாதன் ஊரக வளர்ச்சித் துறை, வட்டச்செயலாளர் ஏ. சண்முகம் சத்துணவு துறை, வட்ட பொருளாளர் பி. ஜெயராமன் வருவாய் துறை, துணைத் தலைவர்கள் தெய்வ. பாஸ்கரன் கல்வித்துறை, என். சண்முகம் ஊரக வளர்ச்சி துறை, கே.மனோகரன் சத்துணவு துறை, இணைச் செயலாளர்கள் பி.ராஜசுலோச்சனா, எல். வசந்தாபாய் அங்கன்வாடி துறை, எஸ்.சாமிநாதன் பொதுப் பணித் துறை, மாவட்ட செயற்குழு உறுப்பினராக எஸ். பார்வதி, தணிக்கையாளர் கே.விஜயா சத்துணவு துறை ஆகியோர் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
இறுதியில் அங்கன்வாடி அமைப்பாளர் அவளிவநல்லூர் டி.லில்லிசுசிலாமேரி அனைவருக்கும் நன்றி கூறினார்.