திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
அண்டமா நதியில் மணல் கொள்ளை..!-பழமை வாய்ந்த நதி அழிந்து விடும் அபாயம் – பொதுமக்கள் வேதனை!..
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அண்டமா நதி, நீண்டகாலமாக விவசாயிகள் தண்ணீர் இந்த நதியின் மூலமே கிடைத்து வருகிறது இதனால் அருகாமையில் உள்ள சுமார் 1500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது
தண்ணீருக்காகவும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்காகவும் முக்கிய பங்கு வகித்து வந்துவருகிறது.
பெரும்பாலான காலங்களில் மழைநீர் இந்த நதியில் தேங்கி, சுற்றுவட்டார நிலங்களுக்கு பயன்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த நதியின் தடுப்பணையில் பக்கவாட்டு சுவர்களை இடித்து சுமார் 250க்கும் மேற்பட்ட லோடு மணல் கடத்தி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிராவல் மண்களும் முறைகேடாக அள்ளப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்
இந்த விவகாரத்தைப்பற்றி தாராபுரம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு கன்னிவாடி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் பொதுமக்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால், தடுப்பணை செயலிழந்து, நதி தண்ணீர் தேங்க முடியாத நிலை உருவாகும் அபாயம் உள்ளது.
மேலும், நதியை சுற்றியுள்ள முற்பகர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இம்முற்பகர்களை மறைத்துக் கொள்வதால் நதியில் மணல் எடுப்பது மற்றவர்களுக்கு உடனடியாக தெரிவதில்லை , ஜேசிபி மற்றும் லாரிகளின் உதவியுடன் மணல் மற்றும் கிராவல் மண்ணை ஏற்றிச் சென்று யூனிட் ஒன்றுக்கு ₹10,000 மற்றும் ₹4,000 என விற்பனை செய்து வருகின்றனர்.
இதேபோல நஞ்சத்தலையூர், புஞ்சலையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மணல் கொள்ளை தொடருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஊர் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு, இரண்டு மணல் லாரிகளை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டதாம்.
இதனையடுத்து, அமராவதி ஆற்று படுகை உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க, திருட்டுக் கும்பல்களை கண்டறிந்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கன்னிவாடி பேரூராட்சி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பேட்டி:திரு கிருஷ்ணகுமார்.
கன்னிவாடி
ஊர் பொதுமக்கள் சார்பாக.