திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடி யூ. ஆர். திருமண மண்டபத்தில் தோழர் எம்.செல்வராஜ் நினைவு அரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலங்கைமான் 22- வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் த.ரெங்கராஜன், பி. சின்னராசா, ச. தேவிகா ஆகியோர் தலைமையில், மாநாட்டு கொடியினை கோயில் மனையில் குடியிருப்போர் சங்க மாவட்ட செயலாளர் பி.வி. சந்திரராமன் கொடியினை ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாநாட்டிற்கு வருகை தந்த மாநில, மாவட்ட தலைவர்கள், பிரதிநிதி தோழர்களை வரவேற்று இளைஞர் பெருமன்ற மாவட்ட துணை செயலாளர் வி. பாக்யராஜ் பேசினார், தோழர் கே.செல்வராஜ் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

கட்சியினுடைய உறுதிமொழியை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜி.ரவி முன்மொழிந்தார். மாநாட்டை துவக்கி வைத்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் அ.பாஸ்கர் துவக்க உரையாற்றினார்.

மூன்று ஆண்டுக்கான வேலை அறிக்கையினை ஒன்றிய செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் முன்மொழிந்தார். மாநாட்டை வாழ்த்தி கட்சி மாவட்ட செயலாளர் (பொ) எஸ். கேசவராஜ், மாவட்ட பொருளாளர் கு. ராஜா, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தவபாண்டியன், AIYF மாவட்ட தலைவர் பாலமுருகன் ஆகிய 31 பேர் கொண்ட ஒன்றிய குழுவும், ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார், ஒன்றிய துணை செயலாளர்கள் கே. செல்வராஜ், வி. பாக்யராஜ், பொருளாளர் டி. கலியமூர்த்தி ஆகியோரை புதிய பொறுப்பாளர்களாக அறிவித்து பாராட்டியும் பேசினார்கள். முடிவில் 01. கோயில் மனையில் குடியிருப்போருக்கு வாடகை முறை ரத்து செய்து பழைய பகுதி முறையை அமல்படுத்த வேண்டும். 02. நார்த்தாங்குடியில் பைபாஸ் சாலையில் கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும். 03. குடிமனை பட்டா இல்லாமல் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருபவருக்கு அதே இடத்தில் மனை பட்டா வழங்கி ரூ. 6 லட்சத்தில் தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும். 04. வலங்கைமான், கோவிந்தகுடி, அவிச்சாகுடி, காருக்குடி, சாலப்போகம், மணக்கோடு, உத்தமதானபுரம் வழியாக பாபநாசம் வரை
மக்கள் பயன்படும் வகையில் மக்கள் நலன் கருதி புதிய பேரூந்து விட வேண்டும்.05. மன்னார்குடி, நீடாமங்கலம், அரையூர், மாணிக்கமங்கலம், இலையூர் வழியாக குடவாசல் வரை புதிய பேருந்து இயக்க வேண்டும். 06. வலங்கைமான், கோவிந்தகுடி, ஆவூர் வழியாக திருக்கருகாவூர் வரை செல்லும் சாலையை செப்பனிட்டு தர வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *