டேராடூனில் நடைபெற்ற தேசிய அளவிலான ஐஸ் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி
தேசிய அளவில் வெள்ளி பதக்கம் வென்று கோவை சிறுவன் அசத்தல் கோவை விமான நிலையம் திரும்பிய ஐஸ் ஸ்கேட்டிங் குழுவினர்களுக்கு உற்சாக வரவேற்பு
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 25 ந்தேதி தேசிய அளவிலான பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது தேசிய அளவில் நடைபெற்ற இதில்,நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்..
இந்நிலையில் தமிழக அணி சார்பாக கோவையில் இருந்து மூன்றாம் வகுப்பு பயிலும் ஹசந்த் என்ற சிறுவன் பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார் கோவையில் இருந்து பள்ளி கல்லூரி மாணவ,மாணவியர் எட்டு பேர் கலந்து கொண்ட நிலையில், கோவை விமான நிலையம் திரும்பிய ஹசந்த உட்பட எட்டு பேருக்கு தமிழ்நாடு ஐஸ் ஸ்கேட்டிங் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்…..
இது குறித்து ஐஸ் ஸ்கேட்டிங் சாம்பியன் மற்றும் பயிற்சியாளர் பிரணவ் கூறுகையில்,தற்போது ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிகளில் தமிழக மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்வதாக கூறிய அவர்,ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சி பெற வட மாநிலத்தில் உள்ளது போல தமிழகத்தில் வசதிகள் இருந்தால் இன்னும் தமிழக மாணவர்கள் சாதிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்..