அரியலூர் நிருபர் கேவி முகமது
அரியலூரில் பிற கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் 150 பேர் இணைந்தனர் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றியம் திருமானூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் திமுக பாமக ஆகிய கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தவர்களுக்கு அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் சால்வை அணிவித்து வாழ்த்தினார்
கட்சியில் அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விளக்கி பேசினார் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஓ பி சங்கர் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் அம்மா பேரவை துணைச் செயலாளர் பிரேம்குமார் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் விக்ரம பாண்டியன் திருமானூர் ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவ குணசேகரன் மாவட்ட இலக்கிய அணி தலைவர் நல்லமுத்து அரியலூர் ஒன்றிய செயலாளர் பொய்யூர் பாலு சுப்பிரமணியன் நகர செயலாளர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்