திருவாரூர் வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின், பொதுக்குழு கூட்டம் திருவாரூர் 21,கீழ சன்னதி தெருவில் உள்ள உள்ள சங்க கட்டிடத்தில் அதன் செயல் தலைவர், முத்தையன் தலைமையில் நடைபெற்றது,

சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆற்றல்மிகு R, குழந்தைவேலு அவர்கள், துணைச்செயலாளர்கள் P, செல்வராஜ், V,சுப்பிரமணியன், துணைத் தலைவர்கள்
M, ஈஸ்வரன்,V, செந்தில் குமார், இணைச்செயலாளர்கள் P, முத்துகிருஷ்ணன்
M,கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்,இந்த ஆண்டு 10th 12th தேர்ச்சி பெற்ற, டிகிரி பட்டம் பெற்ற, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வழக்கம் போல இந்த ஆண்டும்,பரிசு,பாராட்டு நற்சான்றிதழ், கேடயங்கள், ஆகியவை வழங்கி வாழ்த்துக்களை தெரிவிக்கப்பட்டது,

முன்னதாக சென்ற மாதம் வைர விழா கண்ட ராஜ குலத்தோர், மகா சங்கமும் திருக்குறிப்பு தொண்டர் சமூக பேரவையும் இணைந்து திருவாரூரில் நடைபெற்ற மாபெரும் சுயவரம் நிகழ்ச்சி வெற்றி பெற உழைத்த அனைத்து குழுக்களுக்கும் மற்றும் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் சார்பாக பொறுப்பாளர்களால் பயனடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவிக்கப்பட்டது,

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

தீர்மானம் 01,கல்வி, வேலை வாய்ப்பு, சமூக அந்தஸ்தில், பொருளாதாரத்தில், மிக மிக பின்தங்கிய எங்கள் சமூக முன்னேற்றம் அடைய,முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் BC, பட்டியலில் இருந்து MBC பட்டியலை உருவாக்கியது போல, வண்ணார்,
முடி திருத்துவோர், சமூகத்தை,மிக மிக பின்தங்கியோர் பட்டியலை உருவாக்கி SC பட்டியலில் உள்ள மக்களுக்கு அரசு மூலம் என்னென்ன சலுகை இருக்கிறதோ,
அது அனைத்தையும் எங்களுக்கு கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்,

தீர்மானம் 02, தமிழ்நாட்டில் அனைத்து சமூகத்தினரும் பொது தொகுதிகளில் வெற்றி பெறுகிற வாய்ப்பை பெற்றவர்களாக இருக்கின்றனர், வண்ணார், முடிதிருத்துவோர், இந்த இரு ஜாதியினரும் பொது தொகுதியில் நின்று வெற்றி பெற வாய்ப்பு இல்லை, இதனால் எந்த அவையிலும் எங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை, அதனால் எங்களுக்கு (தனித்தொகுதிகளை) சுழற்சி முறையில் உருவாக்கி ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும், அல்லது நியமன உறுப்பினர்ராக நியமித்து அரசுக்கு எங்களுக்கள்ளுடை கோரிக்கைகளை எடுத்துரைக்க வழிவகை செய்ய வேண்டும்,

இந்த நியாயமான கோரிக்கையை பரிசீலித்து அரசு தலையிட்டு அரசாணை வெளியிட வேண்டுமென அரசை தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம், போன்ற
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, கூட்டத்தின் நிறைவாக சங்க பொருளாளர் J. நடராஜன் நன்றி கூறினார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *