எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட கேஸ் கசிவால் தீ விபத்து . 2 கூறை வீடுகள் எரிந்து நாசமானதில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்ள் எரிந்து சேதம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் வசித்து வரும் கஸ்தூரி(70),இவரது வீட்டில் சமையல் செய்யும் போது சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீபற்றி வீடு முழுக்க பரவி கொழுந்துவிட்டு எரிந்தது,பக்கத்து வீடான கஸ்தூரியின் சகோதரி தயாநிதியின் கூறை வீடு அமைந்துள்ளது,காற்றின் வேகத்தில் தீ பரவியது இதனால் சகோதரிகளான 2 பேரின் கூறை வீடுகளும் தீபற்றி முற்றிலும் எரிந்தது.வீட்டில் இருந்த அனைவரும் உடனே வெளியேறியதால் உயிர் தப்பினர்.
தகவல் அறிந்து வந்த சீர்காழி தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர். ஆனால் வீட்டில் இருந்த நகை,பணம்,வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சீர்காழி போலிசார் வழக்கு பதிந்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.