சென்னை துறைமுகத்திலிருந்து ,நேற்று முன்தினம் இரவு, ஆண்டார்குப்பம் கண்டெய்னர் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்து. கண்டெய்னர் லாரி, எர்ணாவூர் முல்லை நகர் அருகே, திடீரென பிரேக் பிடிக்காமல் கேட்டு ஓடியது. அப்போது எதிரே வந்த ஈச்சர் வாகனம் மீது மோதி கண்டெய்னர் லாரியில் முகப்பு பகுதி முழுவதும் சேதமானது. இதில் லாரியை ஓட்டி வந்த திருவாரூரை சேர்ந்த ஓட்டுநர் அசோக்குமார் 43, அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினார்.
அதேபோல், ராணிப்பேட்டையில் இருந்து சென்னை துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, எர்ணாவூர், ராமகிருஷ்ணா நகர் அருகே திரும்ப முயற்சிக்கும்போது, கண்டனர் லாரியில் இருந்த பெட்டி கழன்று கீழே விழுந்தது. சாலையோரம் விழுந்த பெட்டியால் போக்குவரத்து ஏதும் பாதிக்கப்படவில்லை.மேலும் லாரியை ஒட்டி வந்த திருச்சியை சேர்ந்த விக்னேஷ் என்பவரும் காயம் என்று தப்பினார்.
இவ்விரு சம்பவங்கள் குறித்து எண்ணூர் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்