திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி வடிவடையம்மன் ஆதிபுரீஸ்வரர் திரு க்கோவிலில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 25 கோவில்களில் நடைமுறை ப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று ஐந்து கோவில்களில் பிரசாத வழங்கும் நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது.
இதன் வரிசையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவெற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் மற்றும் மண்டல குழு தலைவர் திமு தனியரசு கோவில் இணை ஆணையர் முல்லை உதவி ஆணையர் நற்சோனை உள்ளிட்டோர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
முன்னதாக வடிவுடையம்மன் சுவாமியை தரிசனம் செய்து பின்னர் திருக்கோவில் வளாகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து புளி சாதம் மற்றும் கேசரி பிரசாதத்தை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் பக்தர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார் .
திண்டுக்கல் தண்டாயுதபாணி கோவில் திருவள்ளூர் பவானி அம்மன் கோவில் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் காஞ்சிபுரம் மாவட்டம் அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் துவக்கப்பட்ட இந்த பிரசாத வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி உடனுரை வடிவுடையம்மன் கோவில் இன்று துவக்கப்பட்டது.