மருத்துவ துறையின் நவீன தொழில் நுட்பத்தில் சீனியர் மருத்துவர்களும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என கோவை ஸ்னேகாராம் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்…
மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை போற்றும் விதமாக நாடு முழுவதும் தேசிய மருத்துவ தினம் கடைப்பிடிக்கப்படுகிறது வருகிறது. அது நாட்டுக்கு நாடு மாறுபாடு கொண்டதாக இருக்கிறது.
இந்த நிலையில், கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஸ்னேகாராம் பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது இதில் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் விஸ்வநாதனுக்கு செவிலியர்கள்,மருத்துவமனை ஊழியர்கள் பூச்செண்டு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்..
தொடர்ந்து கோவை தி.மு.க.வடக்கு மாவட்ட மருத்துவ அணி தலைவரும், ஸ்னேகாராம் பல்நோக்கு மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் விஸ்வநாதன் பேசுகையில்,
இந்தியாவில் கடந்த காலங்களை விட தற்போது இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக கூறிய அவர்,இதில் மருத்துவர்களின் பங்களிப்பு அதிகம் இருப்பதாக தெரிவித்தார்..
கடந்த காலங்களை ஒப்பிடும் போது தற்போது மருத்துவ துறையில் இளம் மருத்துவர்கள் அதிகம் இருப்பதாக கூறிய அவர்,மருத்துவ துறையின் நவீன தொழில் நுட்பங்களை கற்று கொள்வதில் சீனியர் மருத்துவர்களும் ஆர்வம் காட்ட வேண்டும் என அவர் கூறினார்…