மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவியாக உமா மகேஸ்வரி இருந்து வருகிறார் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் தற்போது நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு சேர இவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் 30கவுன்சிலர்களில் 28பேர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் உமா மகேஸ்வரி வ கித்து வந்த தலைவர் பதவியை இழக்க நேரிட்டது இதனை அடுத்து நகராட்சி ஆணையர் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களின் ஓட்டெடுப்பின்படி நகர்மன்ற தலைவி பதவி விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து சங்கரன்கோவில் பகுதிகளில் தற்போது சொந்த கட்சியினரே அந்தக் கட்சியின் தலைவியின் பதவியை பறித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.