அரியலூரில் நடந்த பணி நிறைவு பாராட்டு விழா
அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஆக பொறுப்பு வகித்த சீனியர் பேரர் தங்கவேல் பணி நிறைவு பெறுவது ஒட்டி பாராட்டு விழா அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடந்தது பணி நிறைவு பெறும் தங்கவேலுக்கு தாமரை ராஜேந்திரன் பொன்னாடை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் எம்எல்ஏ ராம ஜெயலிங்கம் முன்னிலை வகித்தார்
கள்ளங்குறிச்சி பாஸ்கர் அரசு சிமெண்ட் ஆலை தலைவர் சீனிவாசன் பொருளாளர் கண்ணன் மாவட்ட பொருளாளர் அன்பழகன் அம்மா பேரவை இணைச் செயலாளர் பிரேம் குமார் தமிழ் மாநில காங்கிரஸ் வர்த்தக அணி தலைவர் காமராஜ் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் கலைச்செல்வன் தொழில் அதிபர் டெல்லி ராஜ் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் பொய்யூர் பாலு செல்வராசு முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ராமகோவிந்தராஜன் சண்முகம் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் நகராட்சி கவுன்சிலர் வெங்கடாஜலபதி சிமெண்ட் லோடிங் தலைவர் கார்த்திகேயன் செயலாளர் ராஜேந்திரன் பிரவின் சுதாகர் வரதராஜன் கவியரசன் உட்பட ஏராளமானோர் பணி நிறைவு பெறும் தங்கவேல் அவர்களுக்கு சால்வைகள் பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்து கூறினார்கள் பணி நிறைவு பெறும் தங்கவேல் ஏற்புரை ஆற்றினார்.