காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பொது நிதியில் இருந்து பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொண்டுள்ள நிலையில் ஊராட்சிகளில் உள்ள முக்கிய பிரச்சினைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்க ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்படி ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் கோரிக்கை மனுக்கள் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு ஊராட்சி மன்ற தலைவர்களை சந்தித்து தங்கள் ஊராட்சியில் உள்ள கோரிக்கைகளை தெரிவியுங்கள் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் ஊராட்சிகளில் நூலகம் அமைக்க வேண்டும், சாலை வசதி வேண்டும், குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகையிடம் வழங்கினர்.
இந்நிகழ்வில் வெள்ளாரை அரிகிருஷ்ணன், சேந்தமங்கலம் சார்லஸ், எறையூர் சரவணன், மண்ணூர் அறிவுச்செல்வன், பொடவூர் ரவி, பால்நல்லூர் நேரு, வளர்புரம் எபி உள்ளிட்ட 58 ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்