தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் 35 ஜோடி மணமக்களுக்கு அமைச்சர்கள் தலைமையில் திருமணம்.
திருப்பூர், ஜூன்.2-
திருப்பூர மாவட்டம் தாராபுரம் அகத்தீஸ்வரர் கோவிலில் 35 ஜோடி மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது.தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்,மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினர்.
திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், நகர திமுக செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேளதாளங்கள் முழங்க ஒவ்வொரு ஜோடிகளும் மாலை மாற்றி,மஞ்சள் கயிற்றால் ஆன தாலி கட்டி கொண்டனர்.அப்போது மணமக்களின் உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர்.தொடர்ந்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.