தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் வட்ட வருவாய் துறை அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வல்லம் வட்டார மருத்துவ குழுவினரால் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தலைமையில் நடைப்பெற்றது.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இரத்த அமுத்தம், சர்க்கரை நோய் அறிகுறி, இரத்தம், சளி, சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வட்ட வருவாய் ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் உதவியாளர்கள், வட்ட வழங்கல் அலுவலக அலுவலர்கள், நகர நிலவரி திட்ட அலுவலர்கள் அலுவலக உதவியாளர்கள், வருவாய் கோட்ட அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
மாவட்ட சுகாதார அலுவலர் இணை இயக்குநர் கலைவாணி தலைமையில் 10 மருத்துவர்கள் 45 செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் முகாமில் ஈடுபட்டனர்.