அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு அரியலூரில் வியாழன் வெள்ளி இரண்டு தினங்கள் நடக்கிறது தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்
காமராஜர் திடலில் இருந்து பேரணி துவங்கி அண்ணா சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது இதில் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் சிறப்புரையாற்றுகிறார் மாவட்டச் செயலாளர் ராமநாதன் தலைமை தாங்குகிறார் முன்னாள் மாவட்ட செயலாளர் தண்டபாணி வரவேற்பு உரையாற்றுகிறார் அரியலூர் ஒன்றிய செயலாளர் பாண்டியன் முன்னிலை வகிக்கிறார் வெள்ளிக்கிழமை அரியலூர் ஜி ஆர் திருமண மண்டபத்தில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது