தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி மற்றும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் திமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்
அப்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி

தமிழக முதல்வர் வரலாற்று சிறப்புமிக்க ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். கழக நிர்வாகிகள் இத்திட்டம் மூலம் தொடர்ந்து 45 நாட்களுக்கு நகரம் கிராமம் பூத் வாரியாக சென்று பொது மக்களை சந்தித்து அவர்களிடம் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் இணைத்து தமிழக மக்களின் மண் மானம் மொழி காக்கப்பட்டு இத்திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி இருக்கிறார்கள்.

ஓரணியில் தமிழ்நாடு திட்டம் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை மட்டுமல்ல. ஒன்றிய அரசு தமிழக அரசை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. அதனை மக்களிடம் நேரடியாக சென்று எடுத்துக் கூறி அனைவரையும் ஒன்றிணைத்து ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் ஒன்றினைப்பதே திட்டத்தின் நோக்கம்.

தமிழகத்தில் சாதி மத பேதமின்றி அனைவரிடத்திலும் சென்று எடுத்துக் கூறி ஒன்றிணைப்பது மட்டுமே தலையாய கடமை. ஒன்றிய அரசு எப்பொழுதும் தமிழகத்தின் மீது வன்மத்தை மட்டுமே வீசி வருகிறது. பாஜக அரசு தமிழகத்தை ஒரு பரிசோதனை கூடமாக மட்டுமே பார்த்து வருகிறது.

அவர்களுடைய திட்டம் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது. பாஜக தமிழகத்தில் துரோகிகளையும் போலிகளையும் வைத்து ஆட்சி நடத்த விடலாம் என நினைக்கிறது அதேபோல் தமிழகத்தை மீட்டு விடலாம் என நினைக்கிறது

அது இங்கு அவருடைய திட்டம் பழிக்காது. தமிழக முதல்வர் இத்திட்டத்தை தமிழக மக்களின் நலனை மீட்க வேண்டும் என்பதற்காக அனைவரையும் ஓர் அணியில் சேர்த்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே கொண்டுவந்துள்ளார்கள். அதேபோல் கீழடி அகழ்வாராய்ச்சி கல்வி நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி வழங்காமல் வருகின்றனர்.

மாநில அரசின் உரிமையை பறிப்பதற்காகவே பல்வேறு முயற்சிகள் ஒன்றிய அரசு செய்து வருகிறது. இதனால் மத்திய அரசின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும் அதற்காக தான் திட்டங்கள் அனைத்தையும் மக்களிடம் எடுத்துரைத்து அனைவரையும் ஒன்றிணைப்பதே இத்திட்டத்தை தமிழக முதல்வர் கொண்டுவந்துள்ளார்கள். தமிழக மக்களை எண்ணென்றும் காப்பாற்றுவார் என்பதற்காக தான் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

இந்தி திணைப்பு, கல்வி நிதி நிறுத்திவைப்பு உள்ளிட்ட பல்வேறு வகையில் தமிழகத்தின் வளர்ச்சியை பாஜக தடுத்து வருகிறது. கீழடி அகழாய்வு அங்கீகாரம் அளிக்காதது. எப்படியாவது தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு நாட்டினுடைய வளர்ச்சியை , அதிமுகவோடு கூட்டு சேர்ந்து கொண்டு பல்வேறு செயல்களில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தான் தமிழ்நாடு ஓரணியில் போராட வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் முதல்வர் இன்றைக்கு சென்னையில் ஒரு பிரச்சாரமாக ஓரணியில் தமிழ்நாடு எனும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். ஓரணியில் தமிழ்நாடு என்ற ஒரு உன்னதமான திட்டத்தை நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.

மேற்கு மாவட்டத்தில் பொதுக் கூட்டங்கள் மூலம் மக்களை சந்திக்க இருக்கிறோம்.
தர்மபுரி கிழக்கு மேற்கு மாவட்டங்களில் சார்பில் அரூரில் ஒரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது பி டி ஏ டிஜிட்டல் ஏஜென்ட் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று தமிழகத்தினுடைய சாதனைகளை பரப்புரையாக்க வேண்டும். செயலி மற்றும் உறுப்பினர் படிவத்தை வைத்து உறுப்பினர்கள் சேர்க்கவும் இந்தியாவிலேயே செயலின் மூலம் உறுப்பினர் சேர்ப்பது தமிழகத்தில் திமுக தான் முதன்முதலாக செய்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எப்படி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை அதேபோன்று 2026 தேர்தலிலும் நடக்கும். 2026 திமுக ஆட்சி அமைக்கும் அதை தடுக்க எவராலும் முடியாது ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக என பாசிசம் உள்ளடி வேலையும் பாமகவில் நடப்பது தந்தை மகனுக்கு இடையே நடக்கும் பிரச்சனையாகும். திமுகவிற்கும் பாமகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ராமதாஸ் அவர்களே தெரிவித்திருக்கிறார் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *