அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் பாறைக்கல் தெருவில் பறையர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பாறை கருப்பசாமி, முத்தாலம்மன்,
பாலவிநாயகர், பாலமுருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
இந்த விழாவில். நான்கு கால யாக பூஜைகளை தொடர்ந்து பல்வேறு ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பின்னர் வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டத. ஏற்பாடுகளை பாலமேடு பாறைகல் தெரு உறவின்முறை சங்கம் மற்றும் திருப்பணி குழு நிர்வாகிகள். இளைஞர் சங்கத்தினர் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.