செய்தியாளர்; பா. சீனிவாசன் வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம. புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டி.ஆர்.நம்பெருமாள் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதன் பொருட்டு சிறப்பிக்கும் நிகழ்வில் சி.ம.புதூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் க.சங்கர் சி.ம.புதூர் கிளை நூலகர் ஜா.தமீம், பட்டதாரி ஆசிரியர் தே.சிலம்பரசி, சையத் சலீம் பாஷா ஆகியோர் பங்கேற்று சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
செய்தியாளர்; பா. சீனிவாசன் வந்தவாசி.