ராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில், கலைஞர் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொற்கிழி வழங்கும் விழா
வரும் 9-ம் தேதி புதன்கிழமை கமுதி – பேரறிஞர்அண்ணா திடலில் நடைபெற உள்ளது
இவ்விழா திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமையில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஐ.லியோனி மற்றும் அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, ராஜ கண்ணப்பன் மற்றும் பலர்கலந்து கொள்ள உள்ளனர்

விழாவில் கழக மூத்த முன்னோடிகள் 102 பேருக்கு பொற்கிழி வழங்குதல், விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரம், 5000 ஏழை எளியோருக்கு வேஷ்டி, சேலைகள், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, சிகை அலங்காரக் கலைஞர்களுக்கு உபகரணங்கள் மற்றும் மரக்கன்று வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் செய்து வருகிறார். இதுகுறித்து திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,
ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், ராஜாராம் அவைத்தலைவர் ராஜேந்திரன்,ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி போஸ், துணைத் தலைவர் அய்யனார்,கமுதி பேரூர் கழகச் செயலாளர் பாலமுருகன், அபிராமம் பேரூர் கழகச் செயலாளர் ஜாகிர் உசேன்,மாவட்ட பிரதிநிதிகள் பாரதிதாசன்,
காசிலிங்கம், சேசுராஜ், நந்தகோபால்,ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகரத்தினம், புதுக்குளம் முருகன், அழகர்சாமி,ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி, முருகன், வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிரஞ்சீவி,மகளிரணி தங்கலெட்சுமி, பூங்கொடி மற்றும் நூர்தீன், ராஜேந்திரபிரசாத், சின்னாண்டு உட்பட 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *