தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் அருகே அதிமுக நிர்வாகியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஒருவர் கைது 3பேருக்கு போலீஸ் வலை.

குண்டடம் அருகே, அதிமுக நிர்வாகியை டார்ச்சர் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட 3பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குண்டடம் அருகேயுள்ள பெல்லம்பட்டியை சேர்ந்தவர் செல்வானந்தம்(27). அதிமுக வின் குண்டடம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக பணியாற்றி வந்த இவர், மக்காச்சோள வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2ம் தேதி குண்டடம் பெரியபட்டி ரோட்டில் சுங்கிலியம்பாளையம் பிரிவு அருகே விஷ மாத்திரைகளை தின்றவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் இறந்து போனார்.

அவர் இறந்து போவதற்கு முன் பேசிய ஆடியோவில் தன்னை 4பேர் பணம் கேட்டு மிரட்டி டார்ச்சர் செய்வதாகவும் தனது சாவுக்கு அவர்கள்தான் காரணம் எனவும் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் செல்வானந்தம் மனைவி முத்துப்பிரியா குண்டடம் போலீசில் புகார் கொடுததார்.

அந்த புகாரில் தன் கணவரை மிரட்டிய மதுரை மாவட்ட திமுக மண்டல பொருப்பாளர் மணிமாறன், மதுரை தெற்கு மீனவரணி அமைப்பாளர் முத்துக்குமார், பழனி தாழையூத்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த வெங்கடேஷ், ராஜபாளையத்தை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுகக கோரியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தாராபுரம் கிரைம் இன்ஸ்பெக்டர் சரவணன், குண்டடம் இன்ஸ்பெக்டர் பத்ரா, எஸ்ஐ சண்முகம் ஆகியோர் தலைமையில் 3தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இதில் சீனிவாசனை தஞ்சாவூரில் வைத்து கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 3பேரையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *