கமுதி அருகே குடமுருட்டி ஐயப்பசுவாமி கோவில் ஸ்ரீமத் சாது சுவாமிகள்
35-ம் ஆண்டு குருபூஜை விழாவில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட குடமுருட்டி ஐயப்பசுவாமி கோவில் ஸ்ரீமத் சாது சுவாமிகள் 35-ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று காலை 6 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜையுடன் துவக்கியது.

பின்னர் மஹாபூர்ணாஹீதி அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று பொதுமக்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த குருபூஜை விழாவில் திமுக
மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ
கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

முன்னதாக மாவட்ட செயலாளருக்கு கோவில் அறங்காவலர் முருகன் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், அபிராமம்
பேரூர் கழகச் செயலாளர் ஜாகிர்உசேன் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அறங்காவலர் முருகன் செய்திருந்தார். மேலும் விழாவில் ரேஷன்கடை மேற்பார்வையாளர் வாசு,
திமுக மாவட்ட பிரதிநிதி காசிலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் மணலூர் ராமர்,பால்பண்ணை ஆறுமுகம் உடபட 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அன்னதானத்தில் கலந்து
கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *