தஞ்சாவூர்,
தஞ்சாவூர் அருகே உள்ள திருக்கானூர்பட்டி மண்ணில் தூதுவர்கள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் தமிழ்மாலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவகல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கிார். முதன்மை விருந்தினர்களாக எழுத்தாளர் தஞ்சை ஸ்மைல் மீடியா குமார், மருதுபாண்டியர் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் சங்கீதா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த தமிழ்மாலை விழாவானது மதம் கடந்து சாதி கடந்து மனித வாழ்வை அறவாழ்வாக வாழ்ந்த சமுகம் தமிழ்ச் சமூகம். அறச்சிந்தனையை இலக்கியமாக்கி எதிர்கால சந்ததியினர் அறத்தோடு வாழ ஆசைக்கொண்ட சமூகம் நமது தமிழ்ச் சமூகம். கீழடி போல் தமிழ்ச் சமூக குழந்தைகளும், அறச் சிந்தனைகளை இலக்கிய வழியில் தேட வேண்டும் என்பதை கூறும் நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
இதில் மாணவ-மாணவிகள் ஆத்திசூடி பாடலில் உள்ள 109 வரிகளையும் அதன் விளக்கங்களையும் எடுத்துச் கூறினார்கள்.
ஏட்டுச் சுரக்காயாய் படிப்பு இல்லாமல் அற வாழ்வின் அடித்தளமாக இருக்க தமிழ் இலக்கிய அறிமுகத்தை தொடர்ந்து செயலாற்றுவோம் என உறுதிஏற்றனர். இதில் சமூக ஆர்வலர் முனைவர் பிரனேஷ் இன்பென்ட்ராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் முனைவர் ஜான்பீட்டர் செய்திருந்தார்.