அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய செவிலியர் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் பெரும் திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்தர் ராஜகுமாரி தலைமை தாங்கினார்
மாநில துணைத்தலைவர் வசந்தா மாநில அமைப்பு செயலாளர் பாலாம்பிகை மாநில அமைப்பு மாவட்டத் துணைத் தலைவர் இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி துவக்கி வைத்தார் மாவட்டச் செயலாளர் ராஜகுமாரி நன்றி கூறினார் அடுத்து காலி பணியிடங்களில் கிராம சுகாதார செவிலியர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும்
தற்காலிக பணியாளர்களிடம் தடுப்பூசி பணியினை கொடுக்க வேண்டாம் தடுப்பூசி பணியினை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டாம் கருவுற்ற தாய்மார்கள் சுய பதிவு செய்ய வேண்டியதை கிராம சுகாதார செவிலியர்களை செய்ய சொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
வாடகையற்ற குடியிருப்பு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது மாவட்ட நிர்வாகிகள் எஸ்தர் ராஜகுமாரி வான்மதி மதலை ஜான்சிராணி ஷர்மிளா வசந்தா ராஜகுமாரி விமலா தேவி செல்வி இந்திராணி லில்லிகிரேஸ் வெஸ்லின் மேரி கனகவல்லி பாலாம்பிகை உப்படை ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது