திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயம் எதிரில் உள்ள டாக்டர் கலைஞர் 49- வது பிறந்த நாள் சீரணி கலையரங்கத்தில் பேரூர் திமுக இளைஞர் அணி சார்பில் மண்ணின் மைந்தர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102- பிறந்த நாள் விழா, அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வலங்கைமான் பேரூர் செயலாளர் பா. சிவநேசன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பனங்குடி ஏ.எஸ். குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எஸ். கல்யாணசுந்தரம், பி.தாகீர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மெ. செல்வமணி அனைவரையும் வரவேற்று பேசினார். தலைமை கழக பேச்சாளர்கள் எஸ். அகிலன், இளம் பேச்சாளர் செல்வி சிந்துநதி ஆகியோர் அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பேசினார்கள். கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க. தனித்தமிழ் மாறன், பேரூர் அவைத் தலைவர் சோம. மாணிக்கவாசகம், துணைச் செயலாளர்கள் வி.சி. இராஜேந்திரன், பா.வசந்தி, லாயம் வி.ரமேஷ், பொருளாளர் புருஷோத்தமன், மாவட்ட பிரதிநிதி எஸ்.ரவிச்சந்திரன், ஒன்றிய பிரதிநிதிகள் வி. சதானந்தம், சிங்குதெரு எஸ். ஆர்.ராஜேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்வமணி, ராணி சோம.மாணிக்கவாசகம், க. செல்வம், பானுமதி விசிஆர், ரம்ஜான் பீவி சிவராஜ், கதிர். வீரமணி, நூர்ஜஹான் ஜெகபர் அலி, ஆனந்த குமார், வசந்தி பாஸ்கர், சுமதி தர்மராஜன், பேரூர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோ. புகழ், மதுச்சோழன், எஸ்.எஜி. எஸ்.கணேஷ், எம். மதன் குமார், நிரஞ்சன் மற்றும் 6- வது வார்டு திமுக பொருளாளர் கோ.சண்முசுந்தரம் யாதவ் மற்றும் கட்சி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் மதுச்சோழன் அனைவருக்கும் நன்றி கூறினார். இதேபோல் ஆவூர் கடைவீதியில் நடைபெற்ற இளைஞர் அணி தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன் தலைமை வகித்தார். இளைஞர் அணி அமைப்பாளர்
தமிழ் ரத்தீஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி, வலங்கை பேரூர் செயலாளர் பா. சிவநேசன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் தாட்கோ தலைவர் நா. இளையராஜா, சி.ஆனந்தகுமார், பொதுக் குழு உறுப்பினர் வி. பிரிதிவிராஜன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் பனங்குடி ஏ.எஸ். குமார், எஸ்.கல்யாணசுந்தரம் பி. தாகீர் அலி, நன்னிலம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அ.அன்புபிரபு மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர்கள் எஸ். அகிலன், இளம் பேச்சாளர் செல்வி சிந்துநதி ஆகியோர் ஆட்சியின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பேசினார்கள். கூட்டத்தில் ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஆவூர் கிளை கழக செயலாளர் ஆர்.கோவிந்தராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.