மனவளம் குன்றிய குழந்தைகளுக்கு சிறப்பு கவனம், கல்வி, ஆதரவு தேவைப்படுகிறது. இந்த சிறப்பு குழந்தைகளுக்கான அட்சயா பள்ளி மதுரை ரயில்வே காலனியில் 2000 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் 27 சிறப்பு குழந்தைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு யோகாசனம், நடை பயிற்சி, உடல் இயக்க பயிற்சி, வாழ்க்கை திறன் பயிற்சி, தொழில் சார் பயிற்சி போன்றவை அளிக்கப் படுகின்றன.
இப் பள்ளியை தெற்கு ரயில்வே பெண்கள் நலச்சங்கத்தின் மதுரை கிளை நடத்தி வருகிறது. இந்தப் பள்ளியில் சிறப்பு குழந்தை களுக்காக நவீன வசதிகளுடன் 550 சதுர அடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை தெற்கு ரயில்வே பெண்கள் நல சங்க தலைவி பிரியா சரத் ஸ்ரீவத்சவா திறந்து வைத்தார்.
இந்த கட்டிடத்தில்கல்வி பயில மற்றும் பயிற்சிகள் எடுக்க விசாலமான குளிர்சாதன வசதியுடன் கூடிய அரங்கு உள்ளது. அரங்கிற்கு எளிதாக சென்று வர 45 மீட்டர் நீளத்தில் சாய்வு தளப்பாதை அமைக்கப் பட்டுள்ளது.
புதிய கட்டிட பணியோடு சுவர் சிற்ப ஒப்பனைச் சாந்து பூசப்பட்ட சுற்றுச்சுவர் மற்றும் கண்ணைக் கவரும் வர்ணம் பூசப்பட்ட வகுப்பறைகள் ஆகியவையும் மறுசீரமைக்கப் பட்டுள்ளன. பள்ளி வளாகத்தில் பசுமை பூங்காவும் அமைக்கப் பட்டுள்ளது. விழாவிற்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமை வகித்தார்.
விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி மனைவியும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளி கள் நலஆலோசனை குழு உறுப்பினரு மான ஜி. ஆர். சுவாமிநாதன் , ரயில்வே பெண்கள் நலச்சங்க உதவி தலைவி ஜோதி நாகேஸ்வர ராவ், சங்கப் பொருளாளர் வசந்தி கிரி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.