ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை தங்கும் அறைகளாக மாற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரயில் போக்குவரத்திற்கு பயன்படாத ஐந்து ரயில் பெட்டிகள் வழங்கப்படும். ரயில் பெட்டிகளின் உட்புறத்தில் உரிய மாற்றங்கள் செய்து தங்கும் அறைகளாக்கும் பணி தேர்ந்தெடுக்கப்படும் ஒப்பந்ததாரரின் கடமையாகும்.

பின்பு அவற்றை பயணிகளின் பயன்பாட்டிற்கு அனுமதித்து வரையறுக்கப்பட்ட கட்டணத்தை வசூலித்துக் கொள்ள வேண்டும். இந்த 5 ஆண்டு கால ஒப்பந்த பணிக்கு ஒப்பந்ததாரர்கள் வரவேற்கப் படுகின்றனர்.

இந்த மின்னணு ஒப்பந்தம் பற்றிய மேல் விவரங்களுக்கு www.ireps.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கலாம் அல்லது 9003862967 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மின்னணு ஒப்பந்தங்கள் ஜூலை 15 ம் தேதி மதியம் 12 மணிக்குள் இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *